ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இன்று நடைபெற்ற 2-ஆவது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது.
இதில் இந்தியாவின் உத்தம் சிங் 13-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். அடுத்து ஹர்மன்பிரீத் சிங் 19 மற்றும் 45-வது நிமிடத்தில் இரண்டு கோல் அடித்து வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். 32-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை ஜர்மன்ப்ரீத் கோலாக மாற்றியது இந்தியாவுக்கு பலமாக அமைந்தது. இந்தியாவை சமாளிக்க முடியாமல் தென் கொரிய அணி திணறியது. 32-வது நிமிடத்தில் யாங் ஜிஹுன் ஒரு கோல் மட்டுமே அடிக்க, அதன் பின் அந்த அணியிலிருந்து எந்த கோலும் வரவில்லை. இந்நிலையில், 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. செவ்வாய்கிழமை (செப்.17) நடைபெறும் இறுதிப் போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago