45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

By செய்திப்பிரிவு

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி தனது 3-வது சுற்றில் ஹங்கேரியை எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் டி.குகேஷ் 54-வது காய் நகர்த்தலின் போது ஆடம் கோசாக்கை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் ஆர்.பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலின் போது தமஸ்பானுஸை தோற்கடித்தார்.

தொடர்ந்து அர்ஜுன் எரிகைசி 33-வது காய் நகர்த்தலின் போது பீட்டர் புரோஹாஸ்காவை வென்றார். அதேவேளையில் விதித் குஜராத்தி - பாப் கபோர் மோதிய ஆட்டம் 26-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. முடிவில் இந்திய ஆடவர் அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

மகளிர் பிரிவில் இந்திய அணி, சுவிட்சர்லாந்துடன் மோதியது. இதில் முதல் ஆட்டத்தில் ஹரிகாதுரோணவல்லி 45-வது காய் நகர்த்தலின்போது அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனியுக்கிடம்தோல்வி அடைந்தார். எனினும் 2-வது ஆட்டத்தில் ஆர்.வைஷாலி 38-வது காய் நகர்த்தலின் போதுகசல் ஹக்கிமிஃபார்டை தோற்கடித்தார்.

தொடர்ந்து திவ்யா தேஷ்முக் 32-வது காய் நகர்த்தலின் போது சோபியா ஹிரிஸ்லோவாவையும், வந்திகா அகர்வால் 48-வது காய்நகர்த்தலின்போது மரியா மான்கோவையும் வீழ்த்தினர். முடிவில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணிக்கும் இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்