கார்டிப்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கார்டிப் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் ஜோஷ் இங்லிஸ் 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் விளாசினர். கேப்டன் டிராவிஸ் ஹெட் 31, மேத்யூ ஷார்ட் 28, ஆரோன் ஹார்டி 20 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
194 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கேப்டன் பில் சால்ட் 39, வில் ஜேக்ஸ் 12, ஜோர்டான் காக்ஸ் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். லியாம் லிவிங்ஸ்டன் 47 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 87 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 24 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த ஜோடி 47 பந்துகளில் 90 ரன்களை விளாசி அசத்தியது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் மேத்யூ ஷார்ட் 5 விக்கெட்கள் கைப்பற்றினார். 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி3 ஆட்டங்கள் கொண்ட டி 20கிரிக்கெட் தொடரை 1-1 எனசமநிலையை அடையச் செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃபோர்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
48 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago