சேப்பாக்கம் மைதானத்தில் 45 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி செய்த விராட் கோலி

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். விராட் கோலி, லண்டனில் இருந்து நேரடியாக நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா தலைமயில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்கன் மோர்க்கல், உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோரது முன்னிலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 45 நிமிடங்கள் தீவிரமாக பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். இதேபோன்று வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவும் வலை பயிற்சியில் முனைப்புடன் செயல்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE