உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜெண்டினாவை வீழ்த்தியது கொலம்பியா

By செய்திப்பிரிவு

பாரன்குயிலா: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு கொலம்பியாவின் பாரன்குயிலா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா - கொலம்பியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி களமிறங்கவில்லை.

கொலம்பியா அணி தரப்பில் 25-வது நிமிடத்தில் யெர்சன் மாஸ்கோரா கோல் அடித்து அசத்தினார். 48-வதுநிமிடத்தில் அர்ஜெண்டினா பதிலடி கொடுத்தது. அந்த அணியின் நிக்கோ கோன்சலஸ் அடித்த கோல்காரணமாக ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 60-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கோல் அடிக்க அதுவே அந்த அணியின் வெற்றி கோலாக அமைந்தது. அர்ஜெண்டினா அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

பிரேசில் தோல்வி: மற்றொரு தகுதி சுற்று ஆட்டத்தில் பிரேசில் - பராகுவே அணிகள் மோதின. இதில் பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை தோற்கடித்தது. பராகுவே அணி தரப்பில் 20-வது நிமிடத்தில் டிகோ கோமஸ் கோலடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்