செஸ் ஒலிம்பியாட் புடாபெஸ்டில் தொடங்கியது

By செய்திப்பிரிவு

புடாபெஸ்ட்: ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கியது.

இதில் ஹரிகா, ஆர்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணியும், டி.குகேஷ், விதித் குஜராத்தி, ஆர்.பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா ஆகியோரை உள்ளடக்கிய இந்தியஆடவர் அணியும் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக ஓபன் பிரிவில் 191 அணிகளும், மகளிர் பிரிவில் 180அணிகளும் கலந்து கொண்டுள்ளன. இந்த போட்டி 11 சுற்றுகளை கொண்டதாகும்.

தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் முதல் சுற்று போட்டி இந்திய நேரப்படி இன்றுமாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் 11 சுற்றுகளில் 11 அணிகளை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் போர்டு 1, 2, 3, 4 என 4 போட்டிகள் நடக்கும். அந்த 4 போட்டிகளில் இரு அணிகள் பெறும் புள்ளிகளை வைத்து, அந்த சுற்றின் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும். 11 சுற்றுகள் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். செப்டம்பர் 23-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE