லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வென்றுள்ளது இலங்கை அணி. பதும் நிசங்கா அபாரமாக பேட் செய்து சதம் விளாசி தனது அணியை வெற்றி பெற செய்தார்.
லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 263 ரன்கள் எடுத்திருந்தது.
62 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது. இலங்கை அணிக்காக லஹிரு குமாரா 4 விக்கெட், விஷ்வா ஃபெர்னாண்டோ 3 விக்கெட் மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ 2 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்தை அப்செட் செய்தனர். அந்த இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து.
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது இலங்கை. பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதம் விளாசினார். குசல் மெண்டிஸ் 39, ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்கள் எடுத்தனர். நிசங்கா, 124 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 40.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை நிசங்கா பெற்றார். முதல் இன்னிங்ஸில் அவர் அரைசதம் கடந்திருந்தார். தனது இயல்பான ஆட்டத்தை ஆடியதாக அவர் தெரிவித்திருந்தார். மூன்றாம் நாளன்று இலங்கை அணி அபாரமாக பந்து வீசியதாக இங்கிலாந்து கேப்டன் ஆலி போப் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago