அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் ஜெசிகா பெகுலா, சபலென்கா

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவும் மோதினர். இதில் ஜெசிகா முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் இழந்தார். ஆனால் அடுத்த 2 செட்களிலும் சுதாரித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜெசிகா பெகுலா. இதையடுத்து அடுத்த 2 செட்களையும் அவர் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து ஜெசிகா பெகுலா 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு
முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பெலாரஸின் அரினா சபலென்காவும், அமெரிக்க வீராங்கனை எம்மா நவர்ரோவும் மோதினர்.இதில் சபலென்கா 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் நுழைந்தார்.சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றுப் போட்டியில் இருவரும் மோதவுள்ளனர். கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன்: கலப்பு இரட்டையர் போட்டி இறுதிச் சுற்றில் இத்தாலியின் சாரா எர்ரானி, ஆன்ட்ரியா வாவசோரி ஜோடி 7-6, 7-5 என்ற கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட், டொனால்ட் யங் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE