துபாய்: 3-வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 2025-ம் ஆண்டு ஜூன் 11 முதல் 15-ம்தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16-ம் தேதி ரிசர்வ் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.2021-ம் ஆண்டு சவுத்தாம்படனிலும், 2023-ம்ஆண்டு ஓவல் மைதானத்திலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்தப்பட்டிருந்தது. இந்த இரண்டு இறுதிப் போட்டியிலும் இந்திய அணி விளையாடியிருந்தது. இதில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இந்திய அணி பட்டம் வெல்லும் வாய்ப்பைஇழந்திருந்தது.
இம்முறை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போதைக்கு முதல்இடத்தில் உள்ளது. இந்தஆண்டு இறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குமுன்னேறுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago