நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர்பிரிவு 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவை எதிர்த்து விளையாடினார். இதில் அலெக்சாண்டர் ஜிவேரேவ் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான ரஷ்யாவின்ஆந்த்ரே ரூப்லெவ், 9-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார்.இதில் ஆந்த்ரே ரூப்லெவ் 3-6, 6-7 (3-7), 6-1, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 3-6, 6-4, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 8-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடையும், 20-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சஸ் தியாஃபோ 6-4, 7-6 (7-3), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் 28-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனும் 3-ம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் கோகோ காஃப், சகநாட்டைச் சேர்ந்த 13-ம் நிலை வீராங்கனையான எம்மா நவர்ரோவுடன் மோதினார். 2 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எம்மாநவர்ரோ 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கோகோ காஃபை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.
» பாராலிம்பிக்கில் வெண்கலம் தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து
» காஞ்சிபுரம் டு பாரிஸ்: இடையூறுகளை தகர்த்தெறித்து தாயகத்துக்குப் பெருமை சேர்த்த துளசிமதி!
2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினாசபலெங்கா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸையும் 26-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோஸா 6-1, 6-2 என்ற செட்கணக்கில் சீனாவின் வாங்யாஃபேனையும், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் செங் குயின்வென் 7-6 (7-2), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் 24-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்கையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது அர்ஜெண்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ், ஆண்ட்ரெஸ் மால்டெனி ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 1-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago