மே.இ.தீவுகளில் பயணம் மேற்கொண்டு 2வது டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் இலங்கை 3ம் நாள் ஆட்டமான இன்று களமிறங்க மாட்டோம் என்று போராட்டத்தில் குதித்தது பரபரப்பாகியுள்ளது.
செயிண்ட் லூசியாவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மே.இ.தீவுகள் தன் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 என்று 2ம் நாள் ஆட்டத்தை முடித்தது.
இன்று 3ம் நாள் ஆட்டத்தில் களமிறங்க வேண்டும், ஆனால் இலங்கை வீரர்கள் தங்கள் ஓய்வறையை விட்டு வெளியேவரவில்லை.
காரணம், 2ம் நாள் ஆட்டத்திலேயே பந்தின் தன்மை மோசமானதால் இன்று வேறொரு பந்தை மாற்ற வேண்டும் என்று நடுவர்கள் அலீம் தாரும், இயன் கோல்டும் முடிவெடுத்தனர். இதற்கு இலங்கை அணி கடும் எதிர்ப்பு தெரிவித்து களமிறங்க மறுத்துள்ளது. 44.3 ஓவர்கள் வீசப்பட்ட பந்தை எதற்கு மாற்ற வேண்டும் என்று தகராறு செய்து வருகின்றனர்.
ஆட்ட நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் இலங்கை அணியின் ஓய்வறைக்குச் சென்று நிலைமைகள் குறித்து விசாரித்து வருகிறார்.
காரசாரமான வாக்குவாதத்தில் இலங்கை பயிற்சியாளர் ஹதுரசிங்க ஈடுபட்டு வருகிறார். மே.இ.தீவுகள் பேட்ஸ்மென்கள் காத்திருக்கின்றனர். அலீம் தார், இயன் கோல்ட் ஆகிய நடுவர்கள் களத்தில் காத்திருக்கின்றனர்.
2ம் நாள் ஆட்ட மாலையில் இலங்கை அணியினர் பந்தை பளபளப்பூட்டிய விதத்தில் நடுவர்கள் திருப்தியடையவில்லை என்பதே சர்ச்சையின் மையமாகும்.
தனஞ்ஜெய டிசில்வா நேற்று பந்தை கைகளில் பேண்டுடன் தேய்த்தது இயன் கோல்டுக்கு திருப்தியளிக்கவில்லை. பிறகு வளையத்தை வைத்து பந்தின் வடிவத்தை சோதனை செய்த நடுவர்கள் இலங்கை கேப்டன் சந்திமாலையும் ஆலோசனைக்கு அழைத்துப் பேசினர்.
இதனையடுத்து பந்தை மாற்றியே தீருவது என்று நடுவர்கள் முடிவெடுக்க இது இலங்கை வீரர்களை ஆத்திரமூட்டியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்களின் பால் டேம்பரிங் விவாகரத்திலேயே நடுவர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தனஞ்ஜய டிசில்வாவின் செயலை நடுவர்கள் முன் கூட்டியே எச்சரிக்கை நிமித்தமாகக் கண்டுபிடித்து பந்தை மாற்றும் முடிவை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக பந்தை மாற்றும் முடிவு உறுதி செய்யப்பட்டது, இலங்கை இந்த முடிவை நிச்சயம் சேலஞ்ச் செய்யும், இலங்கை அணிக்கு அபராதமாக 5 ரன்கள் மே.இ.தீவுகளுக்கு வழங்கப்பட்டது, போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago