அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: சின்னர், ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில்முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ’கான்னெல்லுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 6-7 (5-7), 6-3, 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் கனடாவின் கேப்ரியல் டயலோவையும், 5-ம் நிலை வீரரானரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 31-ம் நிலை வீரரான இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியையும் வீழ்த்தினர்.

25-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜாக் டிராப்பர் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் போட்டிக் வான் டி சான்ட்ஸ்கல்பையும், 10-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-7 (4-7), 6-0, 6-0 என்ற செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் டேனியல் இவான்ஸையும், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் 7-5, 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 30-ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 25-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவையும், 5-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவோலினி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 30-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் யுலியா புதின்சேவாவையும் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்றினர்.

6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6 -3, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஜெசிகா பவுஸாஸையும், 16-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் லியுட்மிலா சம்சோனா 6 -1, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அஷ்லின் க்ருகரையும், 18-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் டயானா ஷினைடர் 6-2, 6-2 என்ற செட் கணக்கில்இத்தாலியின் சாரா எர்ரானியையும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜெசிகா பொன் ஷெட்டையும் தோற்கடித்து 4-வது சுற்றில் நுழைந்தனர்.

கால் இறுதியில் போபண்ணா ஜோடி: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, இந்தோனேஷியாவின் அல்டிலா சுட்ஜியாதி ஜோடி 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ், செக் குடியரசின் கேத்ரினா சினியகோவா ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா, அல்டிலா ஜோடி 0-6, 7-6(7-5), 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் போபண்ணா, சுட்ஜியாதி ஜோடியானது ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன், செக்குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடியை எதிர்கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்