ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னன் பிலாண்டரைப் பின்னுக்குத் தள்ளி அஸ்வின் முதலிடம் வந்துள்ளார். மான்செஸ்டர் தோல்வியில் அஸ்வின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 40 ரன்களுக்கு மேல் எடுத்ததால் முதலிடம் பெற்றார்.

அதே போல் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மிட்செல் ஜான்சனை முந்தினார் ஸ்டூவர்ட் பிராட்.

பவுலர்கள் தரவரிசையில் இலங்கையின் ரங்கனா ஹெராத் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5ஆம் இடத்திலும், ஸ்டூவர்ட் பிராட் 9ஆம் இடத்திலும் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE