யு19 கிரிக்கெட் போட்டியில் திராவிட் மகன்: புதுச்சேரியில் இந்தியா - ஆஸி. பலப்பரீட்சை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி முதல் முறையாக புதுச்சேரியில் நடக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இப்போட்டியில் திராவிட் மகன் களமிறங்குகிறார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரி துத்திப்பட்டிலுள்ள சீகெம் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டிகள் வரும் செப்டம்பர் 21, 23, 26 ஆகிய நாட்களில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. போட்டிகள் அனைத்தும் காலை 9.30 மணிக்கு துவங்கவுள்ளது.

இதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் திராவிடின் மகன் சமித் திராவிட் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், ஆடும் அறிமுகப் போட்டியே புதுச்சேரியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்