அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: நடப்பு சாம்பியன் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

By செய்திப்பிரிவு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 28-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்சி பொபிரினுடன் மோதினார். இதில் நோவக் ஜோகோவிச் 4-6, 4-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 8-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு 6-7 (1-7), 3-6, 6-0, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷாங் ஜுன்செங்கையும், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ கொமசானாவையும் வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தனர்.

4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரெவ் 5-7, 7-5, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் தாமஸ் எட்வெரியையும், 6-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-3, 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 32-ம் நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவையும், 9-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் டாலோன் கிரீக்ஸ்பூரையும், 20-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சஸ் தியாஃபோ 4-6, 7-5, 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 13-ம் நிலை வீரரான பென் ஷெல்டனையும் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா 2-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் 29-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கேத்ரினா அலெக்சாண்ட்ரோவாவையும் 3-ம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் கோகோ காஃப் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 27-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர். 7-ம் நிலை வீராங்கனையான சீனாவின் செங் குயின்வென் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜூல் நீமேயரையும் தோற்கடித்து 4-வது சுற்றில் கால்பதித்தனர்.

13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனையான மார்தா கோஸ்ட்யுக்கையும், 24-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸையும் தோற்கடித்து 4-வது சுற்றில் நுழைந்தனர். 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7-6 (7-5), 5-7, 4-6 என்ற செட் கணக்கில் 33-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்