லார்ட்ஸ்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 483 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143, அஸ் அட்கின்சன் 118 ரன்கள் விளாசினர். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணிமுதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 74 ரன்கள் சேர்த்தார்.
231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 54.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜோ ரூட் 121 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசினார். ஹாரி புரூக் 37, ஜேமி சுமித் 26, பென் டக்கெட் 24 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ, லகிரு குமரா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மிலன்ரத்னாயகே, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர்தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 483 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 18 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது. நிஷன் மதுஷ்கா 13, பதும் நிஷங்கா 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். திமுத் கருணரத்னே 22, பிரபாத் ஜெயசூர்யா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago