புது டெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய அணியின் சுவர், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் மகன் சமித் திராவிட் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதுவும் அவர் ஆடும் அறிமுகப் போட்டியே ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக, இந்தியா யு-19 அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு நாள் போட்டிகளிலும் ஆடுகின்றது. 50 ஓவர் போட்டிகள் புதுச்சேரியில் நடைபெறுகின்றன. 4 நாட்கள் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. 18 வயதான சமித் திராவிட் ஒரு ஆல்ரவுண்டர், இவர் சமீபத்தில் மகாராஜா டிராபியில் ஒரு ஸ்டன்னிங் சிக்ஸ் அடித்ததற்காக பரவலாக கவன ஈர்ப்புப் பெற்றார்.
இந்தியா யு-19 ஒரு அணியின் கேப்டனாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மொகம்மட் அமான் நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 21, 23, 26 ஆகிய தேதிகளில் நடக்கின்றது. பிறகு சென்னையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7-ம் தேதிகளில் 2 நான்கு நாள் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த 4 நாட்கள் போட்டிக்கான இந்திய யு-19 அணிக்கு மத்தியப் பிரதேசத்தின் சோஹாம் பட்வர்த்தன் கேப்டனாக இருப்பார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சமித் திராவிட் பெங்களூருவில் நடைபெறும் மகாராஜா டிராபி தொடரில் மைசூரு வாரியர்ஸ் அணிக்கு ஆடுகிறார். மகாராஜா டிராபியில் சமித் திராவிட்டிற்கு பெரிய திறப்பு கிடைக்கவில்லை எனினும் யு-19 அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சோபிக்க அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago