அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் கார்லோஸ் அல்கராஸ் தோல்வி

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்கராஸ், இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று வந்த அவரது வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 21 வயதான அல்கராஸ், நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் டென்னிஸில் வெள்ளி வென்றிருந்தார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆரம்பமான போது சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர்களில் ஒருவராக அவர் பார்க்கப்பட்டார். இதற்கு முன்பு 2022-ல் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் அவர் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் மட்டுமே பட்டம் வென்றது இல்லை. இந்தச் சூழலில் அமெரிக்க நேரப்படி வியாக்கிழமை இரவு நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடரின் இரண்டாவது சுற்று போட்டியில் நெதர்லாந்து நாட்டின் போதிக் வன் த சான்ஸுல்ப் (Botic van de Zandschulp) உடன் விளையாடினார். அவர் ஆடவருக்கான உலக டென்னிஸ் தரவரிசையில் 74-வது இடத்தில் உள்ளார்.

இந்தப் போட்டியில் 6-1, 7-5, 6-4 என அல்கராஸை சான்ஸுல்ப் வீழ்த்தினார். இதற்கு முன்பு முக்கிய தொடர்களில் கடந்த 2021-ல் விம்பிள்டனில் இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவி இருந்தார். அதன் பிறகு இப்போது தான் பிரதான தொடரில் இரண்டாவது சுற்றில் வீழ்ச்சியை எதிர்கொண்டு வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு சான்ஸுல்பை இரண்டு முறை எதிர்கொண்டு, அந்த இரண்டிலும் அவர் வீழ்த்தியுள்ளார். ஆனால், தற்போது ஆட்டம் அவருக்கு அப்படி அமையவில்லை. அவரது இந்த தோல்வி பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இருந்தாலும் விளையாட்டில் வெற்றி மற்றும் தோல்வி என்பது வழக்கமான ஒன்றுதான். நிச்சயம் வரும் நாட்களில் அல்கராஸ் பவுன்ஸ் பேக் கொடுப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்