அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் இகா ஸ்வியாடெக்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இகா ஸ்வியாடெக், ஜன்னிக் சின்னர்ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டுடன் மோதினார்.

இதில் ஜன்னிக் சின்னர் 2-6, 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-2, 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் லி டியூவையும், 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-3,3-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் செர்பியாவின் டஸன் லஜோவிக்கையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

11-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-7 (5-7), 6-4, 3-6, 5-7 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் தனசி கொக்கினாகிஸியிடம் தோல்வி அடைந்தார். 23-ம்நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், கிரேட் பிரிட்டனின் டேனியல் இவான்ஸுடன் மோதினார். இதில் டேனியல் இவான்ஸ் 6-7 (6-8), 7-6 (7-2),7-6 (7-4), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 5 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்றது. இதன் மூலம் அமெரிக்க ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற போட்டியாக இது அமைந்தது.

இதற்கு முன்னர் 1992-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபனில் சுவீடனின் ஸ்டீபன் எட்பெர்க், அமெரிக்காவின் மைக்கேல் சாங் ஆகியோர் மோதியஅரை இறுதி ஆட்டம் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்றிருந்தது. இந்த சாதனையை தற்போது டேனியல் இவான்ஸ் - கரேன் கச்சனோவ் மோதிய ஆட்டம் முறியடித்துள்ளது.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கமிலா ரகிமோவாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 4-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-1, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் தேஸ்தனீ ஐயவாவையும், 5-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-7(5-7), 6-2, 6-4 என்ற செட் கணக்கில்கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவையும், 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா6-4, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஷெல்பி ரோஜர்ஸையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்