நடப்பாண்டில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்குக் கிரிக்கெட் பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணிகளும் பயண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பரில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக குறைந்த ஓவர்கள் தொடரில் ஆடுகிறது ஆஸ்திரேலியா. முதலில் ஸ்காட்லாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகளில் மோதுகிறது. பிறகு இங்கிலாந்துடன் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் பிறகு 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடுகிறது. ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு உலகக் கோப்பை டி20-யில் ஆடியது. அதில் சூப்பர் 8 கட்டத்தைக் கடந்து செல்ல முடியவில்லை.
இந்திய அணியிடம் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்து அரையிறுதியோடு முடித்து வைக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கிலாந்து அணி டி20 தொடரில் 3-0 என்றும், தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என்றும் முன்னிலை வகித்து வருகிறது.
அணிகள் விவரம்: இங்கிலாந்து, ஆஸ்திரேலிய டி20 அணிகள்: ஜாஸ் பட்லர் (கேப்டன்) ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கரன், ஜோஷ் ஹுல், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், சாகிப் முகமது, டேன் மவ்ஸ்லி, ஆதில் ரஷீத், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.
ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கே), ஷான் அபாட், சேவியர் பார்லெட், கூப்பர் கனோலி, டிம் டேவிட், நேதன் எல்லிஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க், கேமரூன் கிரீன், ஏரான் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், ஸ்டாய்னிஸ், ஜாம்ப்பா.
இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேகப் பெதல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜாஷ் ஹுல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷீத், ஃபில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீசி டாப்லி, ஜான் டர்னர்.
ஆஸ்திரேலியா ஒருநாள் அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரி, நேதன் எல்லிஸ், ஜேம்ஸ் பிரேசர் மெக்கர்க், கேமரூன் கிரீன், ஏரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஷ், லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்ப்பா.
போட்டி அட்டவணை: ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் - செப்டம்பர் 4-ம் தேதி முதல் T20I எடின்பர்க், செப்டம்பர் 6-ம் தேதி இரண்டாவது T20I எடின்பர்க், செப்டம்பர் 7-ம் தேதி மூன்றாவது T20I, எடின்பர்க்கில் நடைபெறுகிறது.
அதேபோல, செப்டம்பர் 11-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20I, ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன், செப்டம்பர் 13-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20I, சோபியா கார்டன்ஸ், கார்டிஃப், செப்டம்பர் 15-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது T20I, ஓல்ட் டிராஃபோர்ட் மான்செஸ்டரில் நடக்கிறது.
மேலும், செப்டம்பர் 19-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம், செப்டம்பர் 21-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி, ஹெடிங்லி, லீட்ஸ், செப்டம்பர் 24-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, ரிவர்சைடு, செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட், செப்டம்பர் 27-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி, லார்ட்ஸ், லண்டன் மற்றும் செப்டம்பர் 29-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி, கவுண்டி மைதானம், பிரிஸ்டலில் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago