தரவ்பாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் 174/7 என்ற இலக்கிற்கு எதிராக மே.இ.தீவுகள் 17.5 ஓவர்களில் 176/3 என்று காட்டடியில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது.
மற்ற எந்த வடிவத்திலும் திக்கித் திணறும் மே.இ.தீவுகள் டி20 வடிவத்தில் உண்மையில் ஒரு சக்தியாக எழுச்சி பெற்று வருகின்றனர் என்பதற்கு இந்தப் போட்டி இன்னொரு உதாரணமாகத் திகழ்ந்தது. பிரையன் லாரா அகாடமி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆகச்சிறந்த அதிக ஸ்கோரின் வெற்றிகர விரட்டல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் போவெல் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். தேர்வு செய்ததன் பயன் தென் ஆப்பிரிக்கா அணி 8 ஓவர்களில் 42/5 என்று ஆனது. ஆனால் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (42 பந்துகளில் 76), பாட்ரிக் குரூகர் (32 பந்தில் 44) 71 ரன்களை 6வது விக்கெட்டுக்காக 50 பந்துகளில் விளாசி எழுச்சி பெறச் செய்தனர். மேலும் ஸ்டப்ஸும் ஜான் ஃபோர்ட்டுயின் (11) இணைந்து 7வது விக்கெட்டுக்காக 25 பந்துகளில் 60 ரன்களைச் சேர்த்தனர்.
மே.இ.தீவுகள் தரப்பில் தன் 3வது டி20 போட்டியில் ஆடும் மேத்யூ ஃபோர்டு என்னும் மித வேகப்பந்து வீச்சாளர் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சேசிங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை நோக்கியப் பயணத்தில் முழுக்கட்டுப்பாட்டுடன் இருந்தது. ஷேய் ஹோப் (36 பந்துகளில் 51), அலிக் அதனேஸ் (30 பந்தில் 40)
தொடக்கத்தில் முதல் விக்கெட்டுக்காக 49 பந்துகளில் 84 ரன்களை விளாசிய போதே மேட்ச் முடிந்து விட்டது. பிறகு நிகோலஸ் பூரன் (26 பந்துகளில் 65) மற்றும் ஹோப் இணைந்து 33 பந்துகளில் 54 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் அனுபவமற்ற பந்து வீச்சு வெட்ட வெளிச்சமானதும் நிகோலஸ் பூரன் அவர்களைப் பந்தாடி 20 பந்துகளில் அரைசதம் விளாசி தன் அதிவேக அரைசத சாதனையை நிகழ்த்தினார்.
போட்டியின் ஹைலைட்ஸ் என்னவெனில் 42/5 என்று இருந்த போது ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் தன் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினார். முதலில் தடவினார் 16 பந்துகளில் 13 ரன்களையே எடுத்திருந்தார். பிறகுதான் தடவலிலிருந்து மீண்டு மோட்டியை மிகபெரிய சிக்சர் அடித்தார். பிறகு 33 பந்துகளில் அரைசதம் கண்டார். விஸ்வரூபம் எடுத்தது எப்போதெனில் தன் கடைசி 6 பந்துகளில் 23 ரன்களை விளாசினார் ஸ்டப்ஸ். மொத்தம் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசி, ஒரு சிக்சர் முயற்சியில் ஆட்டமிழந்தார்.
அதே போல் வெஸ்ட் இண்டீஸ் அணி சேசிங்கில் முழுக்கட்டுப்பாட்டுடன் இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணித்தாலும் ஒரு கட்டத்தில் 54 பந்துகளில் 70 ரன்கள் தேவைப்பட்ட போது நிகோலஸ் பூரன் விஸ்வரூபம் எடுத்தார். பர்ஜர் வந்து ஒரு ஸ்லோ பந்தை வீச சிக்சருக்குப் பறந்தது. அடுத்து ஃபுல்டாஸ் அதுவும் சிக்ஸ், பிறகு வேகமாக வீசிய போதும் அடுத்த 2 பந்துகளும் சிக்சர்களுக்குப் பறந்தன, 4 தொடர் சிக்சர்கள் மூலம் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்தார் பூரன். இவரே ஆட்ட நாயகன். ஸ்டப்ஸ், பூரனுக்கான போட்டியோடு பவுலிங்கில் வெஸ்ட் இண்டீஸின் மேத்யூ ஃபோர்டின் சிறந்த போட்டியாகவும் இது அமைந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago