சவுத் சகீல் 141, ரிஸ்வான் 171* ரன் விளாசல்: பாகிஸ்தான் 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது

By செய்திப்பிரிவு

ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சவுத் சகீல் 141 ரன்களும், முகமதுரிஸ்வான் 171 ரன்களும் விளாசினர்.

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 158ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் ஷான் மசூத் 6, பாபர் அஸம் 0 ரன்களில் நடையை கட்டினர். சவுத் சகீல் 57, முகமது ரிஸ்வான் 24 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வதுநாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது.

எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத வங்கதேச அணியின் பந்து வீச்சுக்கு எதிராக சவுத் சகீல், முகமது ரிஸ்வான் ஜோடி சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை அருமையாக கட்டமைத்தது. தனது 3-வது சதத்தை விளாசிய சவுத் சகீல் 261 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் மிராஸ் பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார். சவுத் சகீல், முகமது ரிஸ்வான் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 240 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய ஆகாசல்மான் 19 ரன்களில் வெளியேறினார்.

பாகிஸ்தான் அணி 113 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 448 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

தனது 3-வது சதத்தை விளாசியிருந்த முகமது ரிஸ்வான் 239 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷாகீன் ஷா அப்ரிடி 29 ரன்களுடன் களத்தில் இருந்தார். வங்கதேச அணி தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். மெஹிதி ஹசன் மிராஸ், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது. ஷத்மான் இஸ்லாம் 12, ஜாகீர் ஹசன் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 10 விக்கெட்கள் கைவசம் இருக்க 421 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது வங்கதேச அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்