மே.இ.தீவுகள் அணியில் ரஸ்ஸல், ஹோல்டருக்கு ஓய்வு

By செய்திப்பிரிவு

ஆண்டிகுவா: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் வரும் 24-ம்தேதியும், 2-வது ஆட்டம் 26-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 28-ம் தேதியும் நடைபெறுகிறது.

இந்த 3 ஆட்டங்களும் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் நடைபெறுகின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீனியர் ஆல்ரவுண்டர்களான ஜேசன் ஹோல்டர், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அலிக் அத்தானஸ், 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ ஃபோர்ட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணி விவரம்: ரோவ்மன் பவல் (கேப்டன்), ராஸ்டன் சேஸ், அலிக் அத்தானஸ், ஜான்சன் சார்லஸ், மேத்யூ ஃபோர்ட், ஷிம்ரன் ஹெட்மயர், ஃபேபியன் ஆலன், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், ஓபெட் மெக்காய், குடகேஷ் மோட்டி, நிகோலஸ் பூரன், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்