புச்சிபாபு கிரிக்கெட் போட்டி: ஜார்க்கண்ட் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் புச்சிபாபு கிரிக்கெட் போட்டியில் 12 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன. திருநெல்வேலி ஐசிஎஸ்-சங்கர் நகர் மைதானத்தில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் அணிகள் விளையாடி வருகின்றன. மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களும், ஜார்க்கண்ட் அணி 289 ரன்களும் எடுத்தன.

பின்னர் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மத்தியபிரதேசம் நேற்று 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக விளையாடிய அனிக்கித் வர்மா 110 ரன்கள் எடுத்தார். இதையடுத்து யடுத்து ஜார்க்கண்ட் அணி 2-வது இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேற்று விளையாடியது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஜார்க்கண்ட் அணி 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடை பெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்