புதுடெல்லி: 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அண்மையில் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் நடைபெறவுள்ள டைமண்ட் லீக் தடகளத் தொடரில் நீரஜ் சோப்ரா பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “லாசேன் டைமண்ட் லீக் தொடரில் அடுத்ததாக பங்கேற்கவுள்ளேன். இதற்காக தற்போது சுவிட்சர்லாந்தின் மாக்லின்ஜென் நகரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஒலிம்பிக்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்வது எளிதான காரியம் அல்ல. குறிப்பாக, தங்கப் பதக்கத்தை தக்கவைக்க வேண்டும் என்ற அழுத்தம் என் மீது இருந்த நிலையில் சிறப்பாகவே செயல்பட்டேன்.
அதே நேரத்தில், கடந்த பிப்ரவரியில் நான்காயமடைந்துமீண்டுவந்திருந்தேன்.எனவே, மீண்டும் காயமடைந்து பதக்கத்தை கைவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தேன். நாட்டுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago