முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்று 2-வது டெஸ்ட் போட்டியை கயானாவில் தொடங்கின. இதில் முதல் நாளே 17 விக்கெட்டுகள் விழுந்தன. தென் ஆப்பிரிக்கா 160 ரன்களுக்குச் சுருள, மேற்கு இந்தியத் தீவுகள் முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் என பின்னடைவு கண்டது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து தவறிழைத்தார், மண்ணின் மைந்தனான ஷமார் ஜோசப் 14 ஓவர்கள் 4 மெய்டன்கள் 33 ரன்கள் 5 விக்கெட்டுகள் என்று அசத்த தென் ஆப்பிரிக்க அணி 54 ஓவர்களில் 160 ரன்களுக்குச் சுருண்டது. ஒருவரும் அரை சதம் அடிக்கவில்லை. 10-ம் நிலை வீரர் டேன் பியட் அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார். ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பந்துகள் காற்றில் நன்றாக ஸ்விங் ஆகின. பிட்ச் ஆனதும் தையலில் பட்டு ஸ்விங் ஆனது, தேவையான பவுன்சும் இருந்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாத ஷமார் ஜோசப் இந்த முறை திரும்பி வந்து தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் முதகெலும்பை முறித்தார். எய்டன் மார்க்ரம் எட்ஜ் செய்த அருமையான பந்திலிருந்தே ஷமார் ஜோசப் பந்தின் வேகமும் ஸ்விங்கும் இன்னும் பெரிய சிரமங்களைக் கொடுக்கத் தொடங்கின. தெம்பா பவுமாவை டக்கில் எல்.பி ஆக்கினார். இப்போதைய தென் ஆப்பிரிக்கா அணியின் வளரும் நட்சத்திரமான டேவிட் பெடிங்கம் 28 ரன்களில் நன்றாக ஆடிய போது ஜோசப், அவரை அவுட்ஸ்விங்கரில் காலி செய்தார். கைல் வெரைன் (21), கேஷவ் மகராஜ் (0) ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் தெம்பா பவுமா உட்பட 4 வீரர்கள் ஸ்கோரருக்கு வேலை வைக்கமால் டக் அவுட் ஆகினர். கடைசி விக்கெட்டுக்காக பியட் மற்றும் நாந்த்ரே பர்ஜர் 63 ரன்களைச் சேர்க்காவிட்டால் தென் ஆப்பிரிக்கா 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியிருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இப்படி வீசிய பிட்சில் தென் ஆப்பிரிக்கா பவுலிங்கை மேற்கு இந்தியத் தீவுகளின் பலவீனமான பேட்டிங் வரிசைத் தாக்குப் பிடிக்க முடியுமா என்ன? மிகைல் லூயிஸ், கிரெய்க் பிராத்வெய்ட், அலிக் அதானாஸே, காவெம் ஹாட்ஜ், கீசி கார்ட்டி, ஜொஷுஆ டா சில்வா என்று வரிசையாக வெளியேற 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என மடிந்தது மேற்கு இந்தியத் தீவுகள். ஜேசன் ஹோல்டர் தன் அனுபவத்தினால் 6 பவுண்டரிகளுடன் சரிவை ஒற்றை நபராகத் தடுத்து நிறுத்தி 33 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
இவருக்கு உறுதுணையாக நின்று 7-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் கூட்டணி அமைக்க உதவிய குடாகேஷ் மோட்டி 11 ரன்கள் எடுத்து ஆட்ட முடிவில் மகராஜ் பந்தில் எல்.பி.ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்கள் என்று முதல் நாளை முடித்துள்ளது. ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் விழுந்தது. ஹோல்டரும் ஆட்டமிழந்திருப்பார், அவருக்கு முல்டர் பந்தில் நடுவர் எல்.பி என்று தீர்ப்பளித்தார், ஆனால் ஒருவழியாக ரிவியூவில் தப்பிப் பிழைத்தார். முல்டர் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பர்ஜர் 2 விக்கெட்டுகள். ரபாடாவின் பந்துகள் தீ நாக்கை நீட்டி சீறிப்பாய்ந்தன, ஆனால் அவருக்கு விக்கெட் எடுக்கும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. இந்த டெஸ்ட் போட்டி இரண்டரை, மூன்று நாட்களில் முடியும் வாய்ப்புகள் அதிகம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago