இந்தியாவுக்கு ‘நல்ல நாள்’ முதல் பாக். வீரரின் சாதனை வரை | பாரிஸ் ஒலிம்பிக் ஹைலைட்ஸ்

By ஆர்.முத்துக்குமார்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஆகஸ்ட் 8ம் தேதி இந்தியாவுக்கு நல்ல நாளாக அமைந்தது. தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலம் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை புரிந்தது. மற்ற போட்டிகளில் நடந்தவற்றைப் பார்ப்போம்:

ஆடவர் கூடைப்பந்து: அமெரிக்கக் கூடைப்பந்து ஆடவர் அணி அரையிறுதியில் செர்பியாவை மிக நெருக்கமாக 95-91 என்ற ஸ்கோரில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. ஒரு கட்டத்தில் செர்பியாவிடம் 17 புள்ளிகள் பின் தங்கியிருந்து தனது ஆல்டைம் முன்னணி ஸ்கோரர் லெப்ரான் ஜேம்ஸ் மூலம் எழுச்சி பெற்று செர்பியாவை வீழ்த்தியது.

பிரான்ஸ் அணி மற்றொரு அரையிறுதியில் உலகக் கோப்பை சாம்பியன் ஜெர்மனியை 73-69 என்று வீழ்த்தி யுஎஸ் அணியுடன் இறுதிக்குத் தயாராகியுள்ளது. அமெரிக்க அணி 5வது ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முயற்சியில் உள்ளது.

400 மீ மகளிர் தடை ஓட்டம்: தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை மெக்லாஃப்லின் லெவ்ரோன் உலக சாதனையையும் முறியடித்தார். 50.37 விநாடிகளில் இலக்கைக் கடந்து தனது சொந்த சாதனையையே முறியடித்தார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை அனா காக்ரெட்ல் 51.32 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளிப்பதக்கம் வெல்ல, நெதர்லாந்தின் ஃபெம்கே போல், தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி 50 மீட்டர்களில் சோடை போய் 52.15 விநாடிகள் எடுத்துக் கொண்டு வெண்கலம் வென்றார்.

200 மீ ஓட்டம் புதிய சாம்பியன் ஆன போட்ஸ்வானாவின் லெட்சைல் டிபாகோ: போட்ஸ்வானாவின் எழுச்சிபெறும் நட்சத்திர 200 மீ ஓட்டப்பந்தய வீரர் லெட்சைல் டிபாகோ தங்கம் வென்று சாதனை புரிந்தார். 19.46 விநாடிகளில் இலக்கைக் கடந்தார். ஒலிம்பிக் 100மீ தங்கம் வென்ற நோவா லைலிஸ்தான் இதிலும் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19.70 விநாடிகள் எடுத்து கொண்டு வெண்கலம் வென்றார். இவரது சக அமெரிக்க வீரர் கென்னத் பெட்னாரெக் 19.62 விநாடிகள் எடுத்துக் கொண்டு வெள்ளி வென்றார்.

பெண்கள் நீளம் தாண்டுதல்: அமெரிக்க வீராங்கனை தாரா-டேவிஸ் உட் ஹால் நீளம் தாண்டுதலில் முதல் தங்கம் வென்றார். 4வது தாண்டல் அற்புதமாக அமைய கடந்த ஒலிம்பிக் வெள்ளியை நேற்று தங்கமாக மாற்றினார். 25 வயதான தாரா டேவிஸ் 7.10 மீ நீளம் தாண்ட, மூன்று முறை உலக சாம்பியன் ஆன ஜெர்மனியின் மலைக்கா மிஹாம்போ 6.98 மீ நீளம் தாண்டி வெள்ளியில் முடிந்தார். அமெரிக்க வீராங்கனை ஜாஸ்மின் மூரே 6.96 மீ நீளம் தாண்டி வெண்கலம் வென்றார்.

ஆடவர் ஹாக்கி பைனல்: நெதர்லாந்து-ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி பெனால்டி ஷூட் அவுட்டில் முடிய நெதர்லாந்து 3-1 என்று வெற்றி பெற்று தங்கம் வென்றது, ஜெர்மனிக்கு வெள்ளி, இந்திய அணிக்கு வெண்கலம்.

பெண்கள் வாலிபால்: அரையிறுதியில் பிரேசில் அணியை வீழ்த்தி அமெரிக்க அணி இறுதிக்குள் நுழைந்தது, இறுதியில் துருக்கி-இத்தாலி அணிகளுக்கிடையே வெல்லும் அணியை எதிர்கொள்கிறது.

ஆடவர் கால்பந்து: மொராக்கோ கால்பந்து அணி முதன் முதலாக ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளது. வெண்கலப்பத்தக்கத்திற்கான போட்டியில் எகிப்து அணியை 6-0 என்று நொறுக்கியது மொராக்கோ.

வாட்டர் போலோ-மகளிர்: ஸ்பெயின் அணி நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஈட்டி எறிதல்: பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் இந்தியாவின் கடந்த ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ராவை முறியடித்து 92.97 மீ தூரம் எறிந்து சாதனை படைத்ததோடு ஒலிம்பிக் பைனலில் இருமுறை 90 மீ தூரத்தைக் கடந்து எறிந்த முதல் சாதனை மன்னன் ஆனார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்