ஆப்கன் டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு?

By ராய்ட்டர்ஸ்

பெங்களூரில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அந்தஸ்து ஐசிசி அளித்தபின், தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடுகிறது. இந்தப் போட்டி ஜுன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. இங்கிலாந்தில் கவுண்டி அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்த காரணத்தால், இதில் விளையாடாமல் ஒதுங்கிக்கொண்டார். ஆனால், கழுத்துவலி காரணமாக இப்போது கவுண்டி போட்டியிலும் விராட் கோலி விளையாட முடியாத சூழல் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக விர்திமான் சாஹா சேர்க்கப்பட்டு இருந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியில் விர்திமான் சாஹா இடம் பெற்றிருந்தார். கடந்த 25-ம் தேதி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விர்திமான் சாஹாவின் வலது கை கட்டைவிரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் விளையாடினார். இந்நிலையில், போட்டிக்கு பின் மருத்துவ சிகிச்சையில், சாஹாவின் வலது கை கட்டை விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் எக்ஸ்ரே மூலம் கண்டுபிடித்தனர். இதனால், அவரின் காயம் குணமடைய போதுமான ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், சாஹாவின் கை விரலில் ஏற்பட்ட காயம் குறித்து மருத்து பிசிசிஐ மருத்துவக்குழு ஆய்வு செய்துள்ளது. அவரின் காயத்தின் தன்மை, குணமடைதல் ஆகியவற்றைக் கண்காணித்து வருகிறோம். ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்குள் குணமடையாவிட்டால் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விர்திமான் சாஹாவுக்கு காயம் குணமடையாத பட்சத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது பர்தீவ் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அவ்வாறு வாய்ப்பு ஏற்பட்டால், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் நல்ல ஃபார்மில் இருந்துவரும் தினேஷ் கார்த்திக் பெயர் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி விவரம்:

அஜின்கயே ரஹானே(கேப்டன்), ஷிகார் தவாண், முரளி விஜய், கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, கருண் நாயர், விர்திமான் சாஹா, ஆர்.அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, சர்துல் தாக்கூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்