இந்திய மல்யுத்த வீரர் அமன் அரையிறுதிக்கு முன்னேற்றம் | பாரிஸ் ஒலிம்பிக்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் செஹ்ராவத் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அமன், வடக்கு மாசிடோனியா வீரர் செஹ்ராவத் விளாடிமிர் எகோரோவை எதிர்கொண்டார். தொடக்கத்திலிருந்து ஆக்ரோஷமாக விளையாடிய அமன் ஆதிக்கம் செலுத்தினார். முதல் பாதியில் 5-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார். தொடர்ந்து அவர் ஆதிக்கம் நீடிக்கவே 10-0 என்ற கணக்கில் விளாடிமிர் எகோராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் அமன்.

இதையடுத்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் ஜெலிம்கான் அபகரோவை, இந்திய வீரர் அமன் எதிர்கொண்டார். தனது பலத்தால் தொடகத்திலிருந்தே ஜெலிம்கானை முடக்க முயற்சித்தார் அமன். அதன்படி முதல் பகுதியில் 3-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தார். போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அமன் 12-0 என்ற புள்ளிகள் பெற்று ரஷ்ய வீரரை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி ஆட்டம் இன்று இரவு 9.45 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் ஜப்பான் வீரர் ரெய் ஹிகுச்சியுடன் மோதுகிறார் அமன்.

மறுபுறம் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் 57 கிலோ எடைப் பிரிவின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் அன்ஷு மாலிக், அமெரிக்காவின் ஹெலன் லூயிஸ் மரூலிஸியிடம் 2-7 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE