பளுதூக்குதலில் மீராபாய் சானுவுக்கு 4ஆம் இடம்: நூலிழையில் பறிபோன இந்தியாவின் பதக்க வாய்ப்பு!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்தியாவின் மீராபாய் சானு நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார்.

சீன வீராங்கனை ஹோ ஸூஹி 206 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ருமேனியாவின் மிஹேலா வாலண்டினா காம்பே 205 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். தாய்லாந்து வீராங்கனை சுரோத்சனா காம்போ மொத்தம் 200 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை தக்கவைத்தார்.

இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு 199 கிலோ எடை தூக்கி நான்காம் இடம் பிடித்தார். இதன் மூலம் வெறும் 1 கிலோ வித்தியாசத்தில் இந்தியாவின் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

இதே மீராபாய் சானு, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீராபாய் இம்முறை பதக்கம் வென்றிருந்தால் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4ஆக அதிகரித்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE