“வினேஷ் போகத் தன் சொந்த நாட்டின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார்” - பஜ்ரங் புனியா வேதனைப் பதிவு

By செய்திப்பிரிவு

பாரிஸ்: வினேஷ் போகத் தன் சொந்த நாட்டிலேயே அடித்து நொறுக்கப்பட்டார். தன்னுடைய நாட்டில் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார் என்று இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்தார்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார். ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினாலும், தொடர்ந்து போராடிய வினேஷ் போகத் 16-ஆவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

வினேஷ் போகத்தின் இந்த வெற்றி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சிலாகித்துள்ள இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “இன்று நடந்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற வினேஷ் போகத், இந்தியாவின் பெண் சிங்கம். 4 முறை உலக சாம்பியன் மற்றும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை அவர் வீழ்த்தியுள்ளார். அதன் பிறகு காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை தோற்கடித்தார்.

ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன். இந்தப் பெண் தன் சொந்த நாட்டிலேயே அடித்து நொறுக்கப்பட்டார். தன்னுடைய நாட்டின் தெருக்களில் இழுத்து செல்லப்பட்டார். உலகையே வெல்ல போகும் இந்தப் பெண் இந்த நாட்டின் அமைப்பிடம் தோற்றார்” என்று தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத்தின் இந்த வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ஜப்பானின் யு சுசாகியை இந்திய வீராங்கனை வீழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டின் ஒக்ஸானா லிவாஜை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்.

வினேஷ் போகத் போராட்டம்: காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத். 29 வயதான அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு குரல் எழுப்பினார்.

“நான் ஒலிம்பிக்கில் விளையாடுவதை தடுக்கும் நோக்கில் பிரிஜ் பூஷன் மற்றும் அவரது ஆதரவாளர் சஞ்சய் சிங்கும் இணைந்து அனைத்து வழியிலும் முயற்சித்து வருகிறார்கள்” என ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் கடந்த ஆண்டு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து உடல் எடையை குறைத்து 50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டு உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தினார். அடுத்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக அவர், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தியபோது, தனது பயிற்சியாளர் வோலர் அகோஸைக் கட்டிப்பிடித்து, உணர்ச்சிபொங்க கண்ணீர் சிந்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்