0.005 விநாடியில் தங்கம் முதல் அசத்திய நேத்ரா குமணன் வரை | ஒலிம்பிக் 2024 ஹைலைட்ஸ்

By ஆர்.முத்துக்குமார்

தடகளம்: பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் தடகள ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவின் கிஷானே தாமஸை வெறும் 0.005 விநாடியில் முந்தி தங்கம் வென்ற அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ், 200 மீட்டர் ஓட்டத்திலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். இவர் மட்டுமல்லாமல் எரியன் நைட்டன், கென்னி பெட்னாரக் ஆகிய அமெரிக்க வீரர்களும் 200 மீட்டர் ஓட்டத்தின் அடுத்த சுற்றுக்குத் தயாராக உள்ளனர். மகளிர் 200 மீட்டர் பிரிவில் அமெரிக்க 100 மீட்டர் தங்க மங்கை ஜூலியன் ஆல்பிரெட் தகுதி பெற்றுள்ளார்.

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்: அமெரிக்க ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்று ஏமாற்றமளித்தார். இவர் 11 ஒலிம்பிக்ஸ் பதக்கங்களையும் 30 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்றவர். நேற்று கொஞ்சம் பேலன்ஸ் தவறியதால் வெள்ளிப் பதகக்த்தில் முடிந்தார். பிரேசிலின் ரெபெக்கா ஆந்த்ரேட் தங்கம் வென்றார். அமெரிக்காவின் ஜோர்டான் சைல்ஸ் வெண்கலம் வென்றார்.

சர்ஃபிங்: அமெரிக்க அணியின் கரோலின் மார்க்ஸ் சர்ஃபிங்கில் தங்கம் வென்றார். பிரேசிலின் ததியானா வெஸ்டன் வெப்பை வீழ்த்தினார்.

ஸ்டீபிள் சேஸ்: இந்தியாவின் அவினாஷ் சேபிள் பாரிஸ் ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

நேத்ரா குமணன்: பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான டிங்கி போட்டியில் இந்திய படகோட்டி வீராங்கனை நேத்ரா குமணன் 21-வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறினார்.

ஆடவர் ஹாக்கி: இந்திய அணியும் உலக சாம்பியன் ஜெர்மனியும் இன்று அரையிறுதியில் மோதுகின்றன. இந்திய அணியின் டிஃபெண்டர் அமித் ரோஹிதாஸ் கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக ஃபவுல் செய்து ரெட் கார்டு வாங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனால் இன்றைய போட்டியில் அவர் ஆட முடியாததால் 15 வீரர்கள்தான் இந்திய அணிக்காக உள்ளனர். இதற்கிடையே இந்திய ஹாக்கி அணியினர் மோசமான நடுவர் தீர்ப்புகள் மீது ஒலிம்பிக் கமிட்டியிடம் புகார் எழுப்பியுள்ளனர்.

போல்வால்ட்: ஸ்வீடனின் அர்மாண்ட் மோண்டோ டியூப்ளாண்டிஸ் திங்களன்று போல்வால்ட்டில் உலக சாதனை நிகழ்த்தினார். இவர் கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கம் வென்றவர் என்பதோடு உலகெங்கும் நடைபெறும் போல்வால்ட் போட்டிகளையும் வென்றெடுத்தவர். முதலில் 6.10 மீட்டர் எழும்பித் தாண்டி ஒலிம்பிக் சாதனை படைத்தார், பிறகு 6.25 மீட்டர் எழும்பித் தாண்டி உலக சாதனை நிகழ்த்தினார். இதே பிரிவில் அமெரிக்க வீரர் சாம் கெண்ட்ரிக்ஸ் வெள்ளியும் கிரேக்க நாட்டின் இமானுயெல் காரலிஸ் வெண்கலமும் வென்றனர்.

கால்பந்து: ஸ்பெயினும், பிரான்ஸும் கால்பந்து இறுதியில் வெள்ளிக்கிழமையன்று மோதுகின்றனர். அரையிறுதியில் ஸ்பெயின் அணி 0-1 என்று மொராக்கோவிடம் பின் தங்கியிருந்தது. பிறகு 65-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்துச் சமன் செய்ய, 85-வது நிமிடத்தில் ஜுனாலு சான்சேஸ் இன்னொரு கோல் அடிக்க ஸ்பெயின் வென்று இறுதிக்குள் நுழைந்தது.

வாலிபால்: நேற்று மண் தரையில் நடைபெற்ற மகளிர் வாலிபால் இறுதி-16 சுற்றில் அமெரிக்காவிடம் தோற்று கனடா வெளியேறியது. ஸ்கோர்: 21-19, 21-18. அதேவேளையில் பீச் வாலிபால் போட்டியில் அமெரிக்க ஆடவர் அணி இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

ஒலிம்பிக் 10-ம் நாளான இன்று இந்தியாவுக்குத் தங்கம் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்படும் நீரஜ் சோப்ரா கலந்து கொள்ளும் ஈட்டி எறிதல் போட்டி நடைபெறுகிறது.

ஆடவர் ஈட்டி எறிதல் குரூப் ஏ - இந்திய வீரர் கிஷோர் ஜேனா - இந்திய நேரம் மதியம் 1:50 மணி | ஆடவர் ஈட்டி எறிதல் குரூப் பி - இந்திய வீரர் நீரஜ் சோப்ரா - இந்திய நேரம் மதியம் 3:20 மணி | இந்தியா - ஜெர்மனி ஹாக்கி - இரவு 10:30 மணி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்