பாரிஸ்: ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறி உள்ளது மணிகா பத்ரா, அர்ச்சனா காமத் மற்றும் ஸ்ரீஜா அகுலா அடங்கிய இந்திய மகளிர் அணி. ருமேனியா அணியை 3-2 என்ற கணக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியா வீழ்த்தியது.
முதலில் தொடங்கிய இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அர்ச்சனா காமத் மற்றும் ஸ்ரீஜா வெற்றி பெற்றனர். தொடர்ந்து தனித்து ஆடிய மணிகா பத்ரா வெற்றி பெற்றார். இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை வகித்தது. இருந்தும் ஸ்ரீஜா மற்றும் அர்ச்சனா அடுத்தடுத்து ஆடிய ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தோல்வியை தழுவினர்.
இதனால் ஆட்டம் 2-2 என சமனில் இருந்தது. வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது ஆட்டத்தில் மணிகா பத்ரா, டயகோனுவை 11-5, 11-9, 11-9 என வீழ்த்தினார். இதன் மூலம் ஐந்து ஆட்டங்களில் 3-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. செவ்வாய்க்கிழமை அன்று ஜெர்மனி அல்லது அமெரிக்காவுடன் இந்தியா பலப்பரீட்சை மேற்கொள்ளும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
59 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago