காலிறுதியில் நிஷாந்த் தேவ் தோல்வி: ஒலிம்பிக் குத்துச்சண்டை

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஆடவர் 71 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் தோல்வியை தழுவினார். மெக்சிகோவின் மார்கோ வேர்டுடன் அவர் பலப்பரீட்சை மேற்கொண்டிருந்தார்.

முதல் ரவுண்டில் சிறப்பாக ஆடி இருந்தார் நிஷாந்த் தேவ். கடைசி இரண்டு ரவுண்டுகளில் மார்கோ வேர்ட் கம்பேக் கொடுத்தார். அதன் பலனாக 4-1 என்ற கணக்கில் அவர் வெற்றி பெற்றார். இப்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 4) நடைபெறும் காலிறுதியில் சீன வீராங்கனை உடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்.

இந்தியா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற குத்துச்சண்டை வீரர்கள் அமித், நிஷாந்த் தேவ் மற்றும் வீராங்கனைகள் நிகாத் ஜரீன், ப்ரீத்தி பன்வார், ஜாஸ்மின் ஆகியோர் தோல்வியை தழுவி உள்ளனர். இதில் நிஷாந்த் தேவ் மட்டுமே காலிறுதி சுற்று வரை முன்னேறி இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE