பாரிஸ்: குத்துச்சண்டையில் மகளிர் 66 கிலோ எடைப்பிரிவில் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் அல்ஜீரியாவின் இமானே கெலிஃப். இதன் மூலம் தன் நாட்டுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஹங்கேரியின் லூகா அன்னா ஹமோரியை காலிறுதியில் 5-0 என்ற கணைக்கால் இமானே கெலிஃப் வீழ்த்தினார். இதன் மூலம் அரையிறுதிக்கு அவர் முன்னேறியுள்ளார். பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார். அண்மையில் உலக அளவில் இவரது பாலினம் சார்ந்த சர்ச்சை பேசு பொருளானது. இந்நிலையில், அது அனைத்தையும் கடந்து அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
அவர் அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனை ஜஞ்சேம் உடன் விளையாட உள்ளார். அவரது வெற்றியை அல்ஜீரிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவரும் ரிங்கில் தனது வெற்றியை உணர்ச்சி பெருக்கில் கொண்டாடி மகிழ்ந்தார்.
இமானே கெலிஃப் மற்றும் சீன தைபேவின் லின் யூ ஆகியோர் மீது பாலின சர்ச்சை வெடித்தது. இவர்கள் இருவரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடி வருகின்றனர். இதில் இமானே மீது இத்தாலியின் ஏஞ்சலா கரினி குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago