ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி 4-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் நாம் சுஹியோனிடம் தோல்வியை தழுவினார்.

சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான வில்வித்தை தனிநபர் தகுதிச் சுற்று போட்டியில் தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செல்லி க்ரோப்பனை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, தென் கொரிய வீராங்கனை நாம் சுஹியோனை எதிர்கொண்டார். முதல் செட்டில் 28-26 புள்ளிகளைப் பெற்று 2-6 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார் தீபிகா. அடுத்த செட்டில் 25-28 புள்ளிகளுடன் தோல்வியடைந்தார். இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் ஆட்டம் சமனிலைப் பெற்றது.

அடுத்து 29-28 புள்ளிகளைப் பெற்று மீண்டும் 4-2 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தினார் தீபிகா. அடுத்து 29-27 புள்ளிகளைப் பெற்று தீபிகா பின்தங்க 4-4 என ஆட்டம் மீண்டும் சமநிலைப் பெற்றது. ஆனால், அடுத்தடுத்து சுற்றுகளில் தீபிகா பின்தங்கவே, 4-6 என்ற கணக்கில் தென்கொரிய வீராங்கனை வெற்றி பெற்றார். இதனால் தீபிகா குமாரி அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

முன்னதாக, வில்வித்தை போட்டியின் தகுதிச் சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான பஜன் கவுர், இந்தோனேஷிய வீராங்கனையுடன் 5-5 என சமநிலைப் பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற ஷூட் ஆஃப் முறையில் பஜன் கவுர் தோல்வியடைந்து வெளியேறினார். இதன்மூலம் வில்வித்தை போட்டியில் பங்கேற்ற இரண்டு இந்திய வீராங்கனைகளும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்