2017-ம் ஆண்டில், ஜூலை மாதம் காலே நகரில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பிக்ஸிங் (சூதாட்டம்) நடந்துள்ளது என்று அல் ஜஸீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இது குறித்து விசாரணையை நடத்துவதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அல் ஜஸீரா செய்தி நிறுவனம் ‘கிரிக்கெட் மேட்ச் பிக்ஸர்ஸ்’ என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
''கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் இலங்கையின் காலே நகரில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியும், 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியும் நடந்தது. இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் பிக்ஸிங் நடந்துள்ளது.
காலே மைதானத்தின் ஆடுகளத்தை சூதாட்டக்காரர்களுக்கு ஏற்றார்போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ராபின் மோரிஸ் என்ற சூதாட்டத் தரகர் காலே மைதானத்தின் ஆடுகள பராமரிப்பு துணை மேலாளர் தாரங்கா இந்திகாவைத் தொடர்பு கொண்டு பேசி தங்களுக்கு ஏற்றார்போல் ஆடுகளத்தை மாற்றக் கோரியுள்ளார். அதற்கு அவருக்கு பணம் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த ராபின் மோரிஸ் என்பவர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்நாட்டு போட்டிகளில் விளையாடிய வீரர் ஆவார்.
மேலும், காலே ஆடுகளத்தின் பராமரிப்பு துணை மேலாளர் தாரங்கா இந்திகா ஆடுகளத்தை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்க வேண்டுமா அல்லது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்க வேண்டுமா எனக் கேட்டுள்ளார். உடனடியாக இதைக் கூற முடியாது, போட்டி தொடங்குவதற்கு ஒருவாரத்துக்கு முன்பாக நான் உறுதி செய்கிறேன் என மோரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்ற வேண்டுமானால், அது பேட்டிங்குக்கு சாதகமாக மற்ற வேண்டும். அதற்காக ஆடுகளத்தை நன்றாக இருக்கமாக அமைத்து, கடினமாக்கி விடுகிறேன் என்று ஆடுகள துணை மேலாளர் அல்ஜசீரா எடுத்த ரகசிய வீடியோவில் அவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஏற்றார்போல், காலேயில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 600 ரன்கள் குவித்தது, சூதாட்டக்காரர்களுக்கு மகிப்பெரிய லாபமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 600 ரன்கள் சேர்த்தது. தவான் 190 ரன்களும், புஜாரா 153 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு டிக்ளேர் செய்து 550 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதில் 245 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது இலங்கை அணிக்கு சாதகமாக ஆடுகளத்தில் ரோலர் பயன்படுத்தாமல், பராமரிக்கப்பட்டது. இதனால், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 229 ரன்களில் தோல்வி அடைந்தது.
அதுமட்டுமல்லாமல் வரும் நவம்பர் மாதம் இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே காலே நகரில் நடக்கும் டெஸ்ட் போட்டியிலும் பிக்ஸிங் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அல்ஜஸீரா தயாரித்துள்ள இந்த ஆவணப்படம் நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இணையதளத்தில், ''அல்ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை அறிந்தோம். அந்த நிறுவனம் வெளியிடும் ஆவணப்படம் பார்த்த பின் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம். ஊழல் தடுப்பு அமைப்போடு இணைந்து ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கி இருக்கிறோம். இன்னும் எங்களுக்கு போதுமான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும் போது, முழுமையான விசாரணை நடத்தப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago