ஒலிம்பிக்கில் 1972-க்கு பிறகு ஆஸி.யை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி சாதனை!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் 1972-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அபிஷேக் முதல் கோல் அடித்து உற்சாகம் கூட்டினார். அடுத்து தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் அதனை கோலாக மாற்றி 2-0 என்ற கணக்கில் அணியை முன்னிலைப் பெறச் செய்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் தாமஸ் கிரேக் 25-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 32 நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் 3-வது கோல் அடித்து நம்பிக்கையூட்டினார். 55-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிளேக் கவர்ஸ் பெனால்டி ஸ்ட்ரோக்கை கோலாக மாற்றினார். இறுதியில், ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இதன்மூலம் 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 2-வது இடம்பிடித்தது. ஏற்கெனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காலிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதியிலும், பதக்கச் சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 8-ம் தேதியும் நடைபெற உள்ளன.

வரலாற்று வெற்றி: கடந்த 1972-ம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிக்கில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது இல்லை என்ற சோகம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஒரு வெற்றியை பெற இந்திய அணி சுமார் 52 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணிக்கு ஒட்டுமொத்த இந்தியர்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்