பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. இரண்டாம் நாளான இன்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு பிரிவில் பங்கேற்று விளையாட உள்ளனர். அது குறித்து பார்ப்போம்.
பாட்மிண்டன்: மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, மாலத்தீவுகளின் பாத்திமத் நபாஹாவை எதிர்கொள்கிறார். இந்தஆட்டம் பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், ஜெர்மனியின் ஃபேபியன் ரோத்துடன் மோதுகிறார். இந்த ஆட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
துபாக்கிசுடுதல்: 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் தகுதி சுற்றில் இளவேனில் வாலறிவன், ரமிதா ஜிந்தால் பங்கேற்பு. பகல் 12:45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் ரைபிள்ஆடவருக்கான தகுதி சுற்றில் சந்தீப் சிங், அர்ஜூன் பபுதா பங்கேற்பு. பிற்பகல் 2.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
வில்வித்தை: மகளிர் அணிகள் பிரிவில்தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர் ஆகியோர் கால் இறுதி போட்டியில் பங்கேற்பு. மாலை 5.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
படகுவலித்தல்: ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் ரெப்பேஜ் சுற்றில் பால்ராஜ் பன்வார் பங்கேற்பு. பகல் 1 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
டேபிள் டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் சரத் கமல், சுலோவேனியாவின் கொஷுல் டெனியுடன் மோதுகிறார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சுவீடனின் கிறிஸ்டினா கால்பெர்க்குடன் மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் மணிகாபத்ரா, கிரேட் பிரிட்டனின் ஹர்சி அனாவை எதிர்கொள்கிறார். பகல் 1:30மணிக்கு போட்டி தொடங்குகிறது.
குத்துச்சண்டை: ஆடவருக்கான 51 கிலோ எடைப் பிரிவில் அமித் பங்கால் பங்கேற்பு. பிற்பகல் 2:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
நீச்சல்: ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் ஹீட்ஸில் ஸ்ரீஹரி நடராஜ் பங்கேற்பு. பிற்பகல் 2:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
நீச்சல்: மகளிருக்கான 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ஹீட்ஸில் திநிதி தேசிங்கு பங்கேற்பு. பிற்பகல் 2:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
குத்துச்சண்டை: ஆடவருக்கான 71 கிலோ எடைப்பிரிவில் நிஷாந்த் தேவ் பங்கேற்பு. பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago