24 கோடி பேரில் 7 பேர் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்பு: பாகிஸ்தானை விமர்சித்த வர்ணனையாளர்

By செய்திப்பிரிவு

33-வது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டு திருவிழாவில் பாகிஸ்தானில் இருந்து 7 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

இவர்களுடன் 11 பயிற்சி மற்றும் உதவி பயிற்சியாளர்கள் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் நடைபெற்ற தொடக்க விழா அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது தொலைக்காட்சி வர்ணனையாளர் ஒருவர், "பாகிஸ்தான் 24 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடு, ஆனால் ஒலிம்பிக்கில் 7 விளையாட்டு வீரர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்" என்று கூறினார். இதுதொடர்பான வீடியோக்களை பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வெட்கக்கேடானது. இதற்கு யார் பொறுப்பு? என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE