பாரிஸ் ஒலிம்பிக்: நூலிழையில் பறிபோன வாய்ப்பு

By செய்திப்பிரிவு

ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் 577 புள்ளிகள் சேர்த்து 9-வது இடத்தையும், அர்ஜூன் சிங் சீமா 574 புள்ளிகள் சேர்த்து 18-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா தகுதி சுற்றுடன் வெளியேறினர்.

இதில் சரப்ஜோத் சிங் நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த ராபின் வால்ட்டர் 577 புள்ளிகள் சேர்த்து கடைசி வீரராக இறுதி சுற்றில் நுழைந்தார். சரப்ஜோத் சிங்கும் 577 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் ராபின் வால்ட்டர் 10 (X) உள்வட்டத்தில் சரப்ஜோத் சிங்கைவிட கூடுதலாக ஒரு புள்ளி சேர்த்ததால் இறுதி சுற்று வாய்ப்பை பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்