ஒலிம்பிக் ஹாக்கி: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: நடப்பு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. சனிக்கிழமை அன்று நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான முதல் போட்டியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 10-வது இடத்தில் நியூஸிலாந்து உடன் விளையாடியது. இதில் ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் அடித்த ஷாட் எதிரணி கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. மறுபக்கம் 8-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தது நியூஸிலாந்து. அதன் பலனாக முதல் கால்பகுதியில் (Quarter) 1-0 என நியூஸிலாந்து முன்னிலை பெற்றது.

அதன் பின்னர் இந்திய அணி ஆட்டத்தில் வேகத்தை கூடியது. சில முயற்சிகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தார் இந்தியாவின் மந்தீப் சிங். 2-வது கால் பகுதியில் 1-1 என ஆட்டம் சமனில் இருந்தது.

3-வது கால பகுதியில் ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார் இந்தியாவின் விவேக் பிரசாத். அடுத்த 11 நிமிடங்களுக்கு நியூஸிலாந்து அணி கோல் பதிவு செய்யும் முனைப்புடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அது அனைத்தும் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. 4-வது கால்பகுதியில் ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணி கோல் பதிவு செய்தது. அப்போது ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி இருந்தார். அதன் மூலம் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 29-ம் தேதி அர்ஜெண்டினா அணியுடன் இந்தியா விளையாட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்