பல்லேகலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 213 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினார்.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் பல்லேகலேவில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஓப்பனர்களாக ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை களமிறங்கியது. முதல் 5 ஓவர் வரை இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தில்ஷான் மதுஷங்கா வீசிய 6வது ஓவரில் ஷுப்மன் கில் கேட்ச் கொடுத்து 34 ரன்களில் வெளியேறினார்.
அடுத்த ஓவரே ஜெய்ஸ்வால் 40 ரன்களில் விக்கெட். அடுத்து கைகோத்த சூர்யகுமார் யாதவ் - ரிஷப் பந்து இலங்கையின் பந்துகளை விளாசியது. இதன் விளைவாக 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ். இது அவரின் 20-ஆவது டி20 அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. மதீஷா பதிரானா வீசிய 14-வது ஓவரில் எல்பிடபள்யூ முறையில் அவுட்டானார் சூர்யகுமார். அவர் 26 பந்துகளில் 58 ரன்களைச் சேர்த்திருந்தார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 181 ரன்களைச் சேர்த்தது. 19வது ஓவரில் ரியான் பராக் 7 ரன்களிலும், ரிஷப் பந்த் 49 ரன்களிலும் விக்கெட்டாகினர். அடுத்து கடைசி ஓவரில் ரிங்கு சிங் 1 ரன்னில் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 213 ரன்களைச் சேர்த்தது. அக்சர் படேல் 10 ரன்களுடனும், அர்ஷ்தீப் சிங் 1 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
இலங்கை அணி தரப்பில் மதீசா பதிரானா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், வஹிண்டு ஹசரங்கா, தில்ஷான் மதுஷங்கா, அசிஸ்தா பெர்னான்டோ ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago