பாரிஸ் ஒலிம்பிக் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

By செய்திப்பிரிவு

சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்று பிரான்ஸ் நாட்டில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த விளையாட்டு திருவிழாவை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடூல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

தொழில்நுட்ப உலகின் சாம்ராட்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பாரிஸ் ஒலிம்பிக் பற்றி டூடூல் வெளியிடப்பட்டுள்ளது.

206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து 117 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதன் தொடக்க விழா அணிவகுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ் நாட்டில் உள்ள சீன் நதியில் நடைபெறுகிறது. வீரர்கள், வீராங்கனைகள் படகில் பயணித்த படி இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

இதனைக் குறிப்பிடும் வகையில் நீரில் சில பிராணிகள் மிதந்த படி பயணிப்பது போன்ற அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த டூடூல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பயனர்களின் பார்வைக்கு கிடைக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE