“பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் இந்தியா இல்லாமலேயே ஆடுவோம்” - ஹசன் அலி

By ஆர்.முத்துக்குமார்

2025-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது, பொது மைதானங்களில்தான் விளையாடும் என்ற செய்திகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி, ‘‘இங்கு வந்து ஆட இந்திய அணிக்கு விருப்பமில்லை என்றால் அவர்கள் இல்லாமலேயே ஆடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஹசன் அலி டிவிக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இந்தியாவுக்குச் சென்று ஆடுகிறோம். அப்படியென்றால் அவர்களும் இங்கு வந்து ஆட வேண்டும். இந்தியா வரவிரும்பவில்லை என்றால் அவர்கள் இல்லாமலே ஆடுவோம். கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் தான் நடக்க வேண்டும். இந்தியா பங்கேற்கவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்து போய்விடாது. இந்தியா இல்லை என்றால் மற்ற அணிகள் இருக்கின்றன.” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா 2008 முதல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவில்லை மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் சிக்கல்கள் காரணமாக 2012-13 முதல் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலித் மஹ்மூத் சமீபத்தில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு வந்து ஆடுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே என்று கூறியிருந்தார்.

காலித் மஹ்மூத் தனது பேச்சில், “இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட ஒப்புக்கொள்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ளன. இந்தியா பணக்கார கிரிக்கெட் வாரியம் மற்றும் பல செல்வாக்கைக் கொண்டுள்ளது. அவர்கள் தங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளும் அவர்களின் வழியைப் பின்பற்றும் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.

இப்போதைய சூழ்நிலையில் அப்படி இந்தியா வழியில் செல்லும் மற்ற கிரிக்கெட் வாரியங்களிடம் பேசி வழிக்குக் கொண்டுவருவதுதான் ஒரே வழி. ஐசிசியில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏகப்பட்ட செல்வாக்கு உள்ளது. அவர்களால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.

இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டோம். பாகிஸ்தானுக்கு வெளியே ஆடுகிறோம் என்று பிசிசிஐ சொன்னால், பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதே அர்த்தமில்லாமல் போய்விடும்” என்றார்.

2017-ல் பாகிஸ்தானில் நடைபெற்ற 8 நாடுகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்