2027-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? - கவுதம் கம்பீர் பதில்

By செய்திப்பிரிவு

மும்பை: டி 20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்குஎதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ளஒருநாள் போட்டித் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விலகக்கூடும்என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில் கொண்டு தற்போது இலங்கை தொடரில் இருவரும் களமிறங்க உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் புதியதலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஜஸ்பிரீத் பும்ரா போன்ற ஒருவருக்குபணிச்சுமை மேலாண்மை என்பதுமுக்கியமானது என்று நான்முன்பே கூறியுள்ளேன். ஆனால்பேட்ஸ்மேனைப் பொறுத்தவரை, தொடர்ந்து விளையாடமுடிந்தால், நல்ல பார்மில்இருந்தால், அனைத்து ஆட்டங்களிலும் விளையாடலாம். ரோஹித் சர்மா, விராட் கோலிடி 20 கிரிக்கெட்டில் விளையாடாததால், நாங்கள்கவனிக்க வேண்டியது 2 வடிவங்கள் மட்டுமே. அவர்கள் பெரும்பாலான போட்டிகளுக்கு கிடைக்கப்பெறுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

முக்கியமான போட்டிகளில் ஜஸ்பிரீத்பும்ராவை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கமுயற்சிப்பது எங்கள் பொறுப்பு. அதனால்தான் பணிச்சுமை மேலாண்மை, ஜஸ்பிரீத் பும்ராவுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது.

டி 20 உலகக் கோப்பையிலும், 50 ஓவர் உலகக் கோப்பையிலும், முக்கியமான நாளில் தங்களால் என்ன வழங்க முடியும் என்பதை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் காட்டியுள்ளனர். நான் மிகவும் தெளிவாக சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் இருவரிடமும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது. முக்கியமாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வருவதால்அவர்கள் உத்வேகம் பெறுவார்கள். உடற்தகுதியுடன் இருந்தால்அவர்கள் இருவரும் 2027-ம்ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியும். ஆனால் இது மிகவும் தனிப்பட்டமுடிவு. அவர்களுக்கு எவ்வளவுகிரிக்கெட்மீதம் உள்ளது என்பதைஎன்னால் கூற முடியாது. இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்