ஆமிர், அப்பாஸ், ஹசன் அலி அபாரம்: முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை நொறுக்கி பாகிஸ்தான் வெற்றி

By ஏஎஃப்பி

லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபரா வெற்றி பெற்று 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

4ம் நாளான இன்று வெற்றி பெற 64 ரன்கள் தேவை என்ற நிலையில் பாகிஸ்தான் 66/1 என்று வெற்றி பெற்றது. இமாம் உல் ஹக் 18 நாடவுட், ஹாரிஸ் சொஹைல் 39 நாட் அவுட்.

முதல் இன்னிங்சில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தவறாக முடிவெடுத்த இங்கிலாந்து ஹசன் அலி, அப்பாஸ் பந்து வீச்சில் 184 ரன்களுக்குச் சுருண்டது. 2வது இன்னிங்சிலும் சொதப்பி 160/6 என்று சரிவு கண்ட நிலையில் ஜோஸ் பட்லர், அறிமுக வீரர் டோனிமிக் பெஸ் ஆகியோர் அரைசதம் அடித்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தனர் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்ஸில் 363 ரன்கள் குவித்தது. ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இங்கிலாந்து தன் கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் அடைந்த 7வது தோல்வியாகும் இது. புதிய அணித்தேர்வுக்குழு தலைவர் எட் ஸ்மித்தின் மேற்பார்வையில் முதல் தோல்வியாகும்.

இங்கிலாந்துக்கு ஏற்ற பவுலிங் சூழலில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை இங்கிலாந்தினால் ஆட முடியவில்லை, முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் தூண்டிலில் சிக்கி அனாவசியமாக பந்தைத் தொட்டு எட்ஜ் ஆனதோடு, சில அபாரமான பந்துகள் ஸ்டம்ப்களையும் பதம்பார்த்தது.

இன்று 235/6 என்று தொடங்கியது இங்கிலாந்து. பட்லர் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். ஆனால் கடைசி 4 விக்கெட்டுகளை 7 ரன்களுக்கு 18 பந்துகளில் இழந்து 242 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து.

இன்னிங்ஸ் தோல்வியாகியிருக்க வேண்டியதை தவிர்த்த ஜோஸ் பட்லர், டோமினிக் பெஸ் சதக்கூட்டணி அமைத்து அவமானத்தைத் தவிர்த்தனர்.

இன்று 56 ரன்கள் முன்னிலைய்ல் பட்லர் 66, பெஸ் 55 ரன்களுடன் தொடங்கினர். ஆனால் 8 பந்துகளில் 1 ரன் சேர்த்து மொகமத் அப்பாஸ் பந்தில் 67 ரன்களுக்கு பட்லர் எல்.பி.ஆனார்.

236/7 என்று இருந்த இங்கிலாந்து உடனடியாகவே 241/8 என்று ஆனது. புதிய பந்தில் மார்க் உட், மொகமத் ஆமிர் பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் 169 நாட் அவுட் என்று எடுத்தவர், இதுதான் அந்த ஸ்பாட் பிக்சிங் நடந்த புகழ்பெற்ற போட்டியாகும். ஆமிர், பட், ஆசிப் சிறை சென்றனர். அதன் பிறகே பிராட் பேட்டிங் சரிவைக் கண்டது, வருண் ஆரோன் பவுன்சரில் முகத்தில் அடிவாங்கிய பிறகே அவர் பேட்டிங் தன்னம்பிக்கையை இழந்தது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் அப்பாஸ் பந்தை நோண்டி அவுட் ஆனார். சர்பராஸ் மீண்டும் ஒரு வழக்கமான கேட்ச்.

பெஸ் 57 ரன்களில் ஆமிரின் ஃபுல் பந்தை கோட்டை விட்டு பவுல்டு ஆக 83வது ஓவரில் 242 ஆல் அவுட்.

மொகமது ஆமீர் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஆட்ட நாயகன் அப்பாஸ் 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அப்பாஸ் இந்த டெஸ்ட் போட்டியில் 64 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தைப் புதைத்தார்.

64 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் 12.4 ஓவர்களில் ஊதியது, சொஹைல் கான் ஆஃப் ஸ்பின்னர் பெஸ்ஸை ஒரு சிக்ஸ், ஒரு பவுண்ட்ரி அடித்து ஆதிக்க வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து தன் ஆட்டம் குறித்து ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தோல்வியில் மனமுடைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்