சென்னை: தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ‘பள்ளிகள் ஹாக்கி லீக்’ தொடரின் மண்டல அளவிலான போட்டி சென்னை,எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
7 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை வேப்பேரி சிஎஸ்ஐ செயின்ட் பால் மேல்நிலைப்பள்ளி அணி 2-0 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை அரசு பள்ளி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
42-வது நிமிடத்தில் லக்ஷ்மண ஸ்ரீயும், 44-வது நிமிடத்தில் விஷாலும் கோல் அடித்தனர். வெற்றி பெற்ற செயின்ட் பால் அணிக்கு தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவர் சேகர் மனோகரன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஐஓபி வங்கியின் துணை பொதுமேலாளார் திருமுருகன், சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் செயலர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்ஐசெயின்ட் பால் பள்ளி அணி ‘பள்ளிகள் ஹாக்கி லீக்’ தொடரின் இறுதிக்கட்ட போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டி ஆகஸ்ட் 3-வது வாரத்தில் நடத்தப்பட உள்ளது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago