இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு என்பது வெறும் ஸ்விங் அளவிலேயே தேங்கிப் போயிருந்ததற்கு ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் நீண்ட காலம் அணியில் ஆடியதுதான் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் புதிய ஆக்ரோஷ கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 'இனி வேகம், அதிவேகப்பந்து வீச்சுக்குத்தான் அதிக முக்கியத்துவம்' என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆண்டர்சன், பிராட் ஜோடி 1039 விக்கெட்டுகளைத் தங்களிடையே பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆகவே அவர்களின் பங்களிப்பை மட்டப்படுத்துவதோ, குறைத்துக் கூறுவதோ கூடாது. ஆண்டர்சன், பிராட் அளவுக்கு உடற்தகுதி உடைய கச்சித பவுலர்கள் இங்கிலாந்தில் உருவாக வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. அதிவேக பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் காயம் காரணமாக அணிக்குள் நுழைய முடியவில்லை. இப்படி இருக்கும் போது ஆல் அவுட் ஃபாஸ்ட் பவுலிங் என்ற பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணியின் முடிவு எவ்வளவு தூரம் லபிக்கும் என்பதும் கேள்வியே.
ஆகவே இனி வளைந்து வந்து, மெதுவாக ஆடியாடிக்கொண்டு வந்து வீசி பந்துகளை ஸ்விங் செய்து கொண்டு பந்து தேய்ந்தவுடன் டீப் தேர்ட்மேன், டீப் ஃபைன் லெக் திசையில் பந்துகளை பீல்ட் செய்யும் பவுலர்களின் காலம் இங்கிலாந்தில் முடிந்து விட்டது என்றே தெரிகிறது. ஆகவே விரைவில் கிறிஸ் வோக்ஸ் போன்ற பவுலர்களுக்கும் பென் ஸ்டோக்ஸ், ‘குட் பை’ சொல்லிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டிக்கு மார்க் உட் அணிக்குத் திரும்பியுள்ளார். கஸ் அட்கின்சன் முதல் டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியது இங்கிலாந்தின் பந்து வீச்சு மாற்றத்தைக் குறிப்பதாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு ஆஷஸ் தொடருக்குச் செல்லும் போது வெறும் ஸ்விங் ரகப் பந்து வீச்சு எடுபடாது, வேகத்துடன் பந்தின் தையலை குட்லெந்தில் அடித்து அதிக உயரம் எழுப்பும் வேகப்பந்து வீச்சாளர்களே தேவை என்பதை பென் ஸ்டோக்சும், பிரெண்டன் மெக்கல்லமும் உணர்ந்துள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் இப்படித்தான் கூறுகிறார், “உலகின் எந்த பேட்டரை வேண்டுமானாலும் கேளுங்கள், ஜோ ரூட்டாகட்டும், ஸ்டீவ் ஸ்மித் ஆகட்டும், லபுஷேன் ஆகட்டும் வேகப்பந்து வீச்சுதான்பெரிய ஆயுதம் என்றே கூறுவார்கள்” என்கிறார்.
மேலும் அவர் கூறும்போது, “கஸ் அட்கின்சன் வெறும் வேகம் மட்டுமல்ல அவரிடம் வேறு திறமைகள் உள்ளன. மார்க் உட்டும் அப்படித்தான். வேகமாகவும் வீச வேண்டும், ஸ்விங்கையும் கட்டுப்படுத்த வேண்டும், அட்கின்சன், மார்க் உட் இருவரும் அந்த ரகம். ஆகவே வரும் காலங்களில் இங்கிலாந்து பந்து வீச்சில் ஆலி ஸ்டோன், மார்க் உட், மேத்யூ பிஷர், சாகிப் முகமது, ஜான் டர்னர் என்ற புதிய வேகப்பந்து வீச்சு முகங்களைப் பார்க்கலாம்.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இங்கிலாந்து தன் பிட்ச்களை முதலில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் ஒன்றிரண்டு தொடர்களை உள்நாட்டில் இழந்தாலும் வெளிநாடுகளில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.” என்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago