இலங்கை யு-19 கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியில் யு-19 கேப்டனாக செயல்பட்ட முன்னாள் வீரர் தம்மிகா நிரோஷனா (Dhammika Niroshana) தனது வீட்டின் முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2000 - 2002-ல் இலங்கையின் யு-19 கேப்டனாக இருந்தவர் தம்மிகா நிரோஷனா. அவருக்கு வயது 41. வேகப்பந்து வீச்சாளரான இவர், ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா மற்றும் ஃபர்வீஸ் மஹரூப் ஆகியோருடன் 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்று இலங்கையின் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இலங்கையின் தேசிய அணியில் நிரோஷனா இடம்பெற்றதில்லை. தொடர்ந்து சில ஆண்டுகளில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார் நிரோஷனா.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) இரவு இலங்கையின் அம்பலாங்கொடாவில் உள்ள அவரின் வீட்டின் முன்பு ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றவர் விவரங்கள் தெரியவில்லை. இலங்கை போலீஸார் அது தொடர்பான விசாரணையை துவங்கியுள்ளனர். முதல்கட்ட விசாரணையின்படி, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் கும்பல் மோதலால் நடந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE